• Apr 20 2024

நடிகை பிரியா பவானி சங்கர் இப்படியொரு விளம்பரத்தில் நடித்துள்ளாரா-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்பு சின்னத்திரையில் சீரியல்கள் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

இவர் விஜய்டிவியில் "நெஞ்சம் மறப்பதில்லை" என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து முடித்து வெற்றி கண்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் 10 ஆண்டுகளாக காதலித்து வரும் காதலருடன் ஒரு மாதத்திற்கும் மேல் வெளிநாட்டில் செட்டிலாகியுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இவ்வாறுஇருக்கையில் பல விளம்பரங்களில் நடித்து வரும் அவர் தற்போது டைமன்ஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். பல கோடி மதிப்புள்ள டைமன் நகையை அணிந்து அவர் நடித்த விளம்பரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement