• Apr 19 2024

இயக்குநர் ஹரியின் மனைவியா இது..? இந்த வயசிலும் எப்படி இருக்காங்க பாருங்க...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அன்று தொடக்கம் இன்றுவரை நடிப்பிலேயே தனது கவனத்தை அதிகளவில் செலுத்தி வருகின்றார்.

மேலும் மூத்த நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகள்.


இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் வனிதாவுடன் ஏற்பட்ட சிறு சிறு குழப்பங்கள், மற்றும் சச்சரவுகள் காரணமாக இவர்கள் யாருமே அவருடன் கதைப்பதில்லை.

விஜயகுமாரின் மகள்கள் நால்வரும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இவ் ஐந்து பிள்ளைகளில் நால்வர் சினிமாவில் நடித்திருக்கின்றார்கள். இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான்.

மேலும் இதில் பிரீத்தாவை எடுத்துக் கொண்டால் இவர் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இவர் 1998-ஆம் ஆண்டு 'சந்திப்போமா' என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'படையப்பா' என்ற திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர்.


இவை தவிர 'ருக்மினி, பொண்ணு வீட்டுக்காரன், துபாய், புன்னகை தேசம்' உட்பட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த பிரீத்தா இயக்குநர் ஹரி என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்ததும் சினிமாவிற்கு முழுக்குப் போட்டு விட்டார்.


இதனைத் தொடர்ந்து சந்தோசமாக தனது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்ற இவர் தற்போது நீல வண்ண சேலை அணிந்து தோழிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவாகவும் இட்டிருக்கின்றார்.


இப்புகைப்படங்கள் ஆனவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement